ஊர்க்காவல் படையினரின் சேவைக்கு பாராட்டு
தேனி: தேனி எஸ்.பி., அலுவலகத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக, சேவையாற்றும் 23 அதிகாரிகள், ஊர்க்காவல் படையினரை ஊக்கப்படுத்தி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் சரக உதவி தளபதி அஜய்கார்த்திக்ராஜா தலைமை வகித்தார். எஸ்.பி., சிவபிரசாத் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். வட்டார தளபதி செந்தில்குமார், மாவட்டத் தளபதி முத்துக்கிருஷ்ணன், ஊர்க்காவல்படை எஸ்.ஐ., ஜாஹீர்உசேன், ஏட்டு பிரபாகரன், ஊர்க்காவல் படையினர்பங்கேற்றனர்.