உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  10,086 பேர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத ஏற்பாடு

 10,086 பேர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத ஏற்பாடு

தேனி: மாவட்டத்தில் நவ., 15,16ல் நடக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வினை 10,086 பேர் எழுத ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் 8 மையங்களில் இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு நவ., 15ல் நடக்கிறது. தேர்வு எழுத 46 மாற்றுத்திறனாளிகள் உட்பட 2479 பேர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவ.,16ல் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு 23 மையங்களில் நடக்கிறது. இத் தேர்வு எழுத 90 மாற்றுத்திறனாளிகள் உட்பட 7607 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் காலை 9:30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டுடன் ஆளறி சான்றுகளான ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் அசல் எடுத்து வர வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ