உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெல் பயிர்கள் சேதம் எக்ேடருக்கு ரூ.17 ஆயிரம் நிவாரணம் வங்கி கணக்கில் உடனே வரவு வைக்க ஏற்பாடு

நெல் பயிர்கள் சேதம் எக்ேடருக்கு ரூ.17 ஆயிரம் நிவாரணம் வங்கி கணக்கில் உடனே வரவு வைக்க ஏற்பாடு

கம்பம்: மழை வெள்ளத்தில் ஏற்பட்ட நெல் பயிர்கள் பாதிப்பை அதிகாரிகள் குழு கணக்கெடுப்பில் தீவிரம் காட்டி வருகிறது. விவசாயிகளின் வங்கி கணக்கில் எக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வரவு வைக்க வேளாண் துறை முனைப்பு காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த 17 ல் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாற்றில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் வாய்க்கால்களில் கரைகள் உடைப்பு ஏற்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நெல் வயல்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி பாதிப்புகள் குறித்து அறிக்கை தர அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை முதல் வேளாண், தோட்டக்கலைத் துறை, வருவாய் துறை, புள்ளியியல் துறையினர் வெள்ள பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து வேளாண் துறையினர் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்கள் என்றால் எக்டேருக்கு ரூ.17 ஆயிரம், இதர நவதானிய பயிர்கள் என்றால் ரூ.13 ஆயிரம் நிவாரண தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தோட்டக்கலை பயிர்கள் வாழை, திராட்சை போன்றவற்றிற்கு எக்டேருக்கு ரூ. 22,500 வழங்கப்படும். இயற்கை பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக வரவு வைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதால், நிவாரண தொகை இன்றோ அல்லது நாளையோ வரவு வைக்கப்படும், என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை