உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலைத்திருவிழா போட்டி

கலைத்திருவிழா போட்டி

தேனி:அல்லிநகரத்தில் உள்ள வட்டார வள மையத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. 6 பள்ளிகளை சேர்ந்த 119 மாணவர்கள் குழு நடனம், நாடகம், இசைக்கருவி இசைத்தல், ரங்கோலி, பானை ஓவியம், நாட்டுப்புற நடனம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். இதில் முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் தலைமையில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை