உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளிகளில் புதிய கட்டடங்கள் அமைக்க கருத்து கேட்பு

பள்ளிகளில் புதிய கட்டடங்கள் அமைக்க கருத்து கேட்பு

தேனி: அரசுப் பள்ளிகளில் புதிய கட்டடங்கள் அமைப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்கும் பணிகள் பள்ளிக்கல்வித் துறையால் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளி 325, நடுநிலைப் பள்ளிகள் 99, உயர்நிலைப் பள்ளிகள் 36, மேல்நிலைப் பள்ளிகள் 70 என மொத்தம் 530 அரசுப்பள்ளிகள் உள்ளன. இதில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் புதிய கட்டடங்கள் அமைப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களிடம் கருத்துகள் கேட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கட்டடங்கள் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்கும் பணி நடந்து வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை