ஊராட்சி பெண் உறுப்பினர் மீது தாக்குதல்
மூணாறு: தனியார் தங்கும் விடுதி கைமாறிய சம்பவத்தில் ஊராட்சி பெண் உறுப்பினர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மூணாறு ஊராட்சியில் 4ம் வார்டு உறுப்பினர் கனகம்மா 49, வாகுவாரை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் வசிக்கிறார். இவர், லக்கம் காலனியில் ஒருவர் நடத்தி வந்த தனியார் தங்கும் விடுதியை வேறொருவருக்கு கைமாற உதவியதாக கூறி தாக்கப்பட்டார். அதில் பலத்த காயம் அடைந்தவரை பொது மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக ராஜமலையில் வனத்துறை தற்காலிக ஊழியரான லக்கம் காலனியைச் சேர்ந்தவர் குறித்து மறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.