உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காவலாளி மீது தாக்கு: தாய், மகன் மீது வழக்கு

காவலாளி மீது தாக்கு: தாய், மகன் மீது வழக்கு

உத்தமபாளையம்; சின்ன ஓவுலாபுரத்தில் இளையராஜா என்பவரின் தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை செய்த அருண்ராஜ் 23, உரிமையாளரிடம் சம்பளம் கேட்டபோது தராமல் அடித்து உதைத்த தாய், மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். உத்தமபாளையம் அருகே உள்ளது சின்ன ஒவுலாபுரம் இளையராஜா தென்னந் தோப்பில் காவலாளியாக இதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண்ராஜ், மாதச் சம்பளம் ரூ.12 ஆயிரம் என பேசி வேலைக்கு சேர்ந்துள்ளார். முதல் மாத சம்பளம் ரூ.12 ஆயிரம் தராமல் ரூ.4 ஆயிரம் வழங்கி உள்ளனர். இதனால் வேலைக்கு செல்லாமல் இளையராஜா வீட்டிற்கு சம்பளத்தை கேட்டு சென்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இளையராஜாவின் மனைவி கவிதா, அவரது மகன் ரிதன் மற்றும் சிலர் சேர்ந்து அருண்ராஜை அடித்து உதைத்து சம்பளம் கேட்டால் இதே கதி தான் என்று மிரட்டினர். காயம்பட்ட அருண்ராஜ் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கவிதா,அவரது மகன் ரிதன் உள்ளிட்ட சிலர் மீது ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை