விழிப்புணர்வு முகாம்
போடி : போடி அரசு பொறியியல் கல்லூரியில் அஞ்சல் துறை சார்பில் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கான சேமிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது. அஞ்சல் துறை ஆய்வாளர் சதீஷ் விளக்கி பேசினார். ஏற்பாடுகளை கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் மோகனராவு நவுலூரி, குபேரராஜா செய்திருந்தனர்.