உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

போடி: போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடம் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு தலைமையாசிரியர் மரியசிங்கம் தலைமையில் நடந்தது. இதில் வயதிற்கு ஏற்ப பட்டாசுகளை வாங்கி வெடிக்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். கையில் பிடித்து பட்டாசு வெடிக்காமல் நீளமான குச்சி மூலம் வைத்து வெடிக்க வேண்டும். அதிக புகை வரக்கூடிய பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் குழந்தை, பெரியோர்கள் வீட்டில் இருக்கும் போதும், பெட்ரோல் பங்க், மருத்துவமனை, பஸ்ஸ்டாண்ட், பள்ளிகள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது மணல், தண்ணீர் அருகில் வைத்து கொள்ள வேண்டும். வாகனங்கள் செல்லும் மெயின் ரோடுகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, அரசு அறிவித்து உள்ள நேரத்தின் படி பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை