உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி : குள்ளப்புரம் வேளாண் கல்லுாரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ், கடமலைக்குண்டு வட்டார கிராமங்களில் களப்பணி ஆற்றி வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் சுதிர், கவுதம் வழிகாட்டுதலில் மாணவர்கள் ஹரிகிருஷ்ணா, மஹிபாலன், மெய்யழகன், வேல்வீரா, நித்யானந்தன், சமுத்திரவேல், கீர்த்திவாசன், சோமுராஜ், ஆஷீஸ், யோகேஷ்குமார் ஆகியோர் பங்கேற்ற உலக புவி தின விழிப்புணர்வு ஊர்வலம்கடமலைக்குண்டில் நடந்தது. பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம் காளியம்மன் கோயில் வளாகத்தில் நிறைவு பெற்றது.இயற்கை வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம்குறித்து மாணவ, மாணவிகள், பொது மக்களுக்கு விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை