உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

போடி, : போடி அரசு பொறியியல் கல்லூரியில் பெண்கள் அதிகாரமளிப்பு பிரிவு சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது.பேராசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். ஏ.எச்.எம்., டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஸ்டெல்லா, பெண்களுக்கான அதிகாரம், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு, கல்வி, வேலை வாய்ப்பு குறித்து விளக்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஆர்த்தி, சுதா, ரம்யா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி