உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை

பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை

-பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை கவுமாரியம்மன் கோயில் நூற்றாண்டு பழமையானது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடக்கும். இக்கோயிலில் 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோயில் விமான (கோபுரம்) பாலாலயம் மற்றும் யாகபூஜை நடந்தது. உபயதாரர்கள் ஏற்பாட்டில் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. தென்கரை வர்த்தக சங்கம், உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள், கோயில் ஆய்வாளர் தனலட்சுமி, செயல் அலுவலர் சுந்தரி மற்றும் ஆன்மிக பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ