உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சின்னச்சுருளியில் குளிக்க தொடரும் தடை

 சின்னச்சுருளியில் குளிக்க தொடரும் தடை

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே உள்ள மேகமலை சின்னச்சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை தொடர்வதால் அங்கு செல்வோர் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் செல்வது தொடர்கிறது. பெரும்பாலான மாதங்களில் நீர் வரத்து இருக்கும். மழைக் காலத்தில் அதிகப்படியான நீர் வரத்து ஏற்படும். தேனி, வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அருவி பகுதிக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த படிக்கட்டுகள், தரைப்பாலம் ஆகியவை வெள்ளத்தில் சேதம் அடைந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக சுற்றுலாப் பயணிகள் சின்னச்சுருளி அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. வனத்துறையினர் கோம்பைத்தொழு சோதனைச்சாவடியில் இருந்து அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ