உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொடர்ந்து வரத்து குறைவால் வாழை இலை விலை உயர்வு வரத்து குறைவால் வாழை இலை விலை உயர்வு

தொடர்ந்து வரத்து குறைவால் வாழை இலை விலை உயர்வு வரத்து குறைவால் வாழை இலை விலை உயர்வு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வெள்ளையத்தேவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, வேகவதி ஆசிரமம், புதூர், மூனாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை, கரட்டுப்பட்டி, குன்னூர், அரப்படித்தேவன்பட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி உள்ளது. இப்பகுதியில் வாழை மரங்களில் வெட்டப்படும் இலைகள் உள்ளூர் தேவையுடன் அன்றாடம் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆண்டிபட்டி பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. சுழன்றடிக்கும் காற்று வாழை மரங்களில் இலைகளை சேதப்படுத்துகிறது. இதனால் தரமான இலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. வரத்து குறைவால் விலை உயர்கிறது. வியாபாரிகள் கூறியதாவது: கடந்த சில நாட்களில் 5 வாழை இலைகள் கொண்ட மடி ரூ.30ல் இருந்து ரூ.60 வரை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் ஓட்டல்கள், சிறு உணவகங்களில் வாழை இலையை தவிர்த்து பாலிதீன் பயன்பாட்டை அதிகரித்துள்ளனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ