கூடைப்பந்து போட்டி: திரவியம் மகளிர் கல்லுாரி அணி சாம்பியன்
பெரியகுளம்,: மகளிர் கல்லுாரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் திரவியம் மகளிர் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி இரு தினங்களாக திரவியம் மகளிர் கல்லூரி மைதானத்தில் நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர் பாண்டியராஜ் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் ஹேமலதா, முதன்மை செயலர் டாக்டர் வசந்த் முன்னிலை வகித்தனர். ஆங்கிலத்துறை பேராசிரியை பிரீத்தி, அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் லட்சுமி வரவேற்றனர். அன்னை தெரசா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ராஜம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க முன்னாள் மேலாளர் சுப்புராஜ் பங்கேற்றார். பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் மோதியது. இதில் கைலாசபட்டி திரவியம் மகளிர் கல்லூரி அணி முதலிடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தாமரைக்குளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை,அறிவியல் கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது. திண்டுக்கல் புனித அந்தோனியார் கல்லூரி அணி நான்காம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கமும், கேடயம் வழங்கப்பட்டது. பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார்.