மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி உற்சாகம்
05-Jan-2025
தேனி : தேனியில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி நடந்தது. போட்டிகள் 13,15,17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நடந்தது. கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் போட்டிகளை கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.ஏ.டி.எஸ்.பி., சுகுமார் முன்னிலை வகித்தார். சைக்கிள் போட்டி பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு, அன்னஞ்சி விலக்கு, வடபுதுப்பட்டி வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை வென்ற மாணவர்களுக்கு வங்கி கணக்கில் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் போட்டியை ஒருங்கிணைத்தார்.
05-Jan-2025