உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி

 பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி

தேனி: தேனியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் பறவைகள் கணக்கெடுப்பு தொடர்பாக வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விவேக் தலைமை வகித்தார். வனவர் திவ்யா பறவைகள் கணக்கெடுப்பு, படிவங்கள் பூர்த்தி செய்யும் முறை, பறவை இனத்தை கண்டறிவது உள்ளிட்டவை பற்றி விளக்கினார். பயிற்சி வகுப்பில் வனத்துறை ரேஞ்சர்கள் அருள்குமார், சந்திரசேகரன், சாந்தகுமார், செல்வராணி, ஆதிரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி