உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடியில் பா.ஜ., கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்

போடியில் பா.ஜ., கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்

போடி: போடி நகராட்சி 9வது வார்டில் சுகாதார பணிகள் நடைபெறாததை கண்டித்து கவுன்சிலர் நகராட்சியை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.நகராட்சி 9வது வார்டில் குப்பை அகற்றாமல், சாக்கடை தூர்வாரத்தாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று வார்டு கவுன்சிலர் மணிகண்டன்( பா.ஜ.,) நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ஆமை வேகத்தில் நடக்கும் சுகாதார பணிகள் என்ற வாசகத்துடன் பதாகை ஏந்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டார். சுகாதார அலுவலர் அறை முன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். சுகாதார அலுவலர் மணிகண்டன், ஆய்வாளர்கள் கவுன்சிலரிடம் அரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். சுகாதார பணிகள் விரைந்து செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதின் பேரில் கவுன்சிலர் போராட்டத்தை கைவிட்டார்.கவுன்சிலர் மணிகண்டன் கூறுகையில்,' நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் தி.மு.க., கவுன்சிலர் வார்டுகளில் மட்டும் சுகாதார பணிகள் நடக்கிறது. எனது வார்டில் சுகாதாரப் பணிகள் தொய்வு உள்ளது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை