உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ., தர்ணா போராட்டம்

பா.ஜ., தர்ணா போராட்டம்

மூணாறு; வட்டவடை ஊராட்சியில் பத்து ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி காணப்படும் ரோடுகளை சீரமைக்க வேண்டும். விளை நிலங்களுக்கு வரி செலுத்த வசதி செய்ய வேண்டும். பசு வளர்த்தல் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ., சார்பில் ஊர்வலம் நடத்தி வட்டவடை ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டமும் நடந்தது. வட்டவடை பகுதி தலைவர் ராமர் தலைமை வகித்தார். பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சானுமாஷ் துவக்கி வைத்தார். துணை தலைவர் மோகனன், பொது செயலாளர் அழகர்ராஜ், மண்டல தலைவர் முருகன், பொது செயலாளர் கலைவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை