உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பா.ஜ.,வினர் கருத்து கேட்பு 

 பா.ஜ.,வினர் கருத்து கேட்பு 

தேனி: பா.ஜ., சார்பில் பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளில் உங்கள் பரிந்துரை என்ற தலைப்பில் கருத்துகேட்பு பணி நேற்று துவங்கியது. பொதுமக்களிடம் மத்திய பா.ஜ., அரசின் மக்கள் திட்டங்கள் அச்சிட்ட நோட்டீஸ்கள் வழங்கப் பட்டன. அதில் பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை எழுதி அதற்கென அமைக்கப்பட்ட பெட்டியில் போட்டனர். தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த கருத்து கேட்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கதலிநரசிங்க பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நகர தலைவர் ரவிக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை