மேலும் செய்திகள்
பண்ருட்டி நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள் சாதனை
19-May-2025
பாலாஜி மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம்
19-May-2025
போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் போடி அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 மாணவர்கள் தேர்வு எழுதினர். 54 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இப் பள்ளி மாணவி தனுஜா 489 மதிப்பெண்கள், அறிவியல் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று போடி அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நிஷா 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2 ம் இடமும், மாணவி தேவி ஸ்ரீ 475, மாணவர் ஷஷ்டிஹரன் 475 மதிப்பெண்கள் பெற்று 3 ம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 12 பேர் பெற்று சாதனை படைத்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன், செயலாளர் இனாயத் உசேன்கான், பள்ளி ஆட்சி குழு உறுப்பினர்கள் காளிமுத்து, மாரிமுத்து, சுப்பிரமணியம் ராமராஜ், சேதுராமன், முதல்வர் உமா மகேஸ்வரி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
19-May-2025
19-May-2025