உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வளர்ச்சி பணிகளை நோக்கி போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி

வளர்ச்சி பணிகளை நோக்கி போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் கா.கண்ணன் காளிராமசாமி, செயல் அலுவலர் க.சிவக்குமார் கூறுகையில்: மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக கிடைக்கும் வகையில் அம்ருத் 2.0., திட்டத்தின் கீழ் ரூ.1525 லட்சம் செலவில் பைப் லைன் அமைத்து, குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு உள்ளன. பாலாஜி நகரில் பூங்கா வசதி,திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சம் செலவில் மக்கும் குப்பை, மக்காத குப்பையாக பிரித்தெடுக்கப்படுகின்றன. 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.78 லட்சம் செலவில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், சுகாதார வளாகங்கள் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது. பள்ளி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 38 லட்சம் செலவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனித்தனி சுகாதார வளாகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.6.45 லட்சம் செலவில் அமராவதிநகர், வ.உ.சி., தெருவில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டு உள்ளன. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் செலவில் பூங்கா பராமரிப்பு, சுற்றுச் சுவர் கட்டப்பட்டு உள்ளன. கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் பேட்டரி வாகனம் 13.82 லட்சம் செலவில் வாங்கப்பட்டு உள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 43 லட்சம் செலவில் திடக்கழிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் செலவில் கெப்பபண கவுண்டர் ஊருணியை சுற்றி தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த கட்டட ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்பட்டு கொள்ளப்பட்டு உள்ளன. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை