உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உடல் தான உறுதிமொழி படிவம் வழங்கும் விழா

உடல் தான உறுதிமொழி படிவம் வழங்கும் விழா

தேனி : தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூராய்வு பிரிவு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்தத் தலைவர் சீதாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு முழு உடல் தான உறுதிமொழி படிவங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் சச்சிதானந்தம் எம்.பி., பங்கேற்றார். துணை முதல்வர் டாக்டர் தேன்மொழி, துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் முத்து, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் மணிமொழி, ஈஸ்வரன், உடற்கூராய்வியல் துறையின் துணைத் தலைவர் டாக்டர் எழிலரசன், கட்சி நிர்வாகிகள் வெங்கடேசன், கண்ணன், ஆறுமுகம், வெண்மணி, லெனின், தர்மர், முனீஸ்வரன், முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, 80 பேர் தங்களது முழு உடல் தானம் வழங்குவதற்கான உறுதிமொழி படிவங்களை சமர்பித்தனர். அனைவருக்கும் அதற்கான சான்றிதழ்களையும், பாராட்டு கேடயங்களையும் திண்டுக்கல் எம்.பி., வழங்கி, பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை