மேலும் செய்திகள்
மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை
30-Jun-2025
தேனி: தேனியில் டாஸ்மாக் பாரில் காயங்களுடன் இறந்து கிடந்த தமிழ்புலி கள் கட்சியின் நகர இணைச் செயலாளர் கணேசன் உடலை மீட்டு பழனிசெட்டிபட்டி போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கடை மூடப்பட வேண்டிய நேரத்தில் விற்பனை நடந்ததால் டாஸ்மாக்கை கண்காணிக்க தவறிய இன்ஸ்பெக்டர் விளக்கம் அளிக்க தேனி எஸ்.பி., சினேஹா பிரியா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பழனிசெட்டிபட்டி வடக்கு ஜெகநாதபுரம் காமாட்சி அம்மன் கோயில் தெரு கணேசன் 35. தமிழ்புலிகள் கட்சியின் தேனி நகர இணைச் செயலாளராக உள்ளார்.இவர் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வீட்டை விட்டு சென்றார்.பூதிப்புரம் ரோட்டில் உள்ள மது பாரில்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். எஸ்.ஐ., ஆசீர்வாதம் தலைமையிலான போலீசார் விசாரணையில், கணேசனின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மர்மநபர்களால் தாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. கணேசனின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் கூறுகையில், டாஸ்மாக் பாரில் விடிய விடிய மதுவிற்பனை நடந்து வருவதாக கணேசன் கூறிவந்துள்ளார். அதற்கு பின் கணேசன் தாக்கப்பட்டு இறந்துள்ளார். எனவே, சந்தேக மரணம் என வழக்குப் பதிந்துவிசாரித்து வருகிறோம்,' என்றனர். இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் தகவல் அறிந்த எஸ்.பி., சினேஹா பிரியா, டாஸ்மாக் கடைகள் எப்போதும் மதியம் 12:00 மணிக்கு திறந்து, இரவு 10:00 மணி வரை மட்டுமே திறந்திருக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் கணேசன் கொலை காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் நடந்துள்ளது. இந்த நேரத்தில் அந்த டாஸ்மாக் பார் செயல்பட்டதை கண்காணிக்க தவறிய பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம் வி ளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள் ளார்.
30-Jun-2025