உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுபுரத்தில் நூலக வாசகர் வட்டம் சார்பில், எழுத்தாளர் ரிஷிகேசன் எழுதிய 'வாழ்ந்து தீராத பக்கங்கள்' நூல் வெளியீட்டு விழா மற்றும் நூலக வார விழா நடந்தது. சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். நூலாசிரியர் ரிஷிகேசன் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட பொருளாளார் சாந்தி, சீனிவாசன் வரவேற்றனர். எழுத்தாளர் தாமோதரன் நூலினை வெளியிட வாசகர்கள் சாந்தினி, நர்மதா, மணிவண்ணன், ரமேஷ் பெற்றுக்கொண்டனர். பட்டிமன்ற பேச்சாளர் கவிக்கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர். வாசகர் வட்ட செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார். முன்னதாக நிகிலா தாண்டவம் கலைக்கூட மாணவிகள் பரதநாட்டியம் வாயிலாக நூல்களை படிக்க வலியுறுத்தி நடனமாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !