மேலும் செய்திகள்
கோடை மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு
20-May-2025
கம்பம்: தொடர்ந்து மழை பெய்து வருவதால் 10 நாட்களாக செங்கல் உற்பத்தி நிறுத்தியுள்ளதால் தொழிலாளர்கள் சோகத்தில் உள்ளனர்.கம்பத்தில் 50 க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் உள்ளன. சமீபத்தில் சேம்பர் காளவாசல்களும் செயல்படுகின்றன. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் களவாசங்களில் வேலை செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், செங்கல் காளவாசல்கள் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளது. மழை தொடர்வதால் செங்கல் உற்பத்தியை துவக்க முடியவில்லை. இதனால் செங்கல் விலை கணிசமாக உயர துவங்கியுள்ளது. ஆயிரம் கல் ரூ. 6 ஆயிரமாக இருந்தது தற்போது ரூ.6500 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே தொடர்ந்து சாரல் பெய்வதால், காலவாசல்கள் திறப்பதை உரிமையாளர்கள் ஒத்திவைத்துள்ளனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் வேலை இல்லாததால் காளவாசல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
20-May-2025