அஞ்சல் காப்பீட்டு பாலிசிகளில் அலைபேசி எண் இணைக்க முகாம்
தேனி: தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் கூறியதாவது: தபால்துறை ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் இதுவரை அலைபேசி எண், இமெயில் ஐ.டி.,யை இணைத்திடாத பாலிசிதாரர் தங்கள் அலைபேசி எண், இமெயில்ஐ.டி.யை இணைத்துக் கொள்ள சிறப்பு முகாம்கள் அக்., 27 முதல் டிச.15 வரை அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. இது முற்றிலும் இலவச சேவை. அலைபேசி எண், இமெயின் ஐ.டி.,யை இணைப்பதன் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் தங்கள் பாலிசிகளுக்கு பிரிமியம் செலுத்தலாம். பாலிசியின் மீது கடன் பெறுதல், முதிர்ச்சி தேதி, சரண்டர் செய்தல் ஆகிய பரிவர்த்தனை நடந்தால் அதன் விபரங்கள் பாலிசிதாரர்கள் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு உடனுக்குடன் குறுந்தகவல் அனுப்பப்படும். இதனால் பாதுகாப்பான, உடனடி பரிவர்த்தனை உறுதிசெய்யப்படுகிறது. எனவே, இதுவரை அலைபேசி எண், இமெயில் ஐ.டி., இணைக்காத பாலிசிதாரர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலு வலகங்களுக்கு சென்று அப்டேட் செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.