உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சில்வார்பட்டியில் நாளை முகாம்

சில்வார்பட்டியில் நாளை முகாம்

தேனி: தொழிலாளர் நலத்துறை சார்பில் நாளை(நவ.,6) பெரியகுளம் தாலுகா சில்வார்பட்டி ஊராட்சி சமுதாய கூடத்தில் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் ஆன்லைன் பொருட்கள், உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி புத்தகம், புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை