உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஏலக்காய் கிலோ விலை ரூ.2500 விற்று சாதனை

 ஏலக்காய் கிலோ விலை ரூ.2500 விற்று சாதனை

கம்பம்: கடந்த ஆறு மாதங்களாக ஏலக்காய் சராசரி விலை ரூ.2500 விற்று சாதனை படைத்ததுடன், தொடர்ந்து மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பதுடன் உற்பத்தியில் சாதனை படைத்திருப்பதால் ஏல விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ஏலக்காய் சாகுபடி பிரதான இடத்தை பிடித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் அமைச்சகம், இடுக்கி மாவட்டத்தின் மூன்று தாலுகாக்களை 'கார்டமம் ரிசர்வ்' என அறிவித்துள்ளது. இங்கு 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி யாகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உற்பத்தி பாதிப்பு இருக்கும் என முதலில் மதிப்பீடு செய்யப் பட்டது. ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் உற்பத்தி சரிவில் இருந்து மீண்டது. அதே நேரம் இந்திய ஏலக்காய்க்கு போட்டியாளராக உள்ள குவாதிமாலா நாட்டில் கடும் வறட்சி காரணமாக 40 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏலக்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சராசரி விலை கிலோவிற்கு ரூ.2500க்கு விற்பனை ஆகிறது. குறிப்பாக விலையில் ஏற்றம், இறக்கம் இல்லாமல் கட்டுப்படியான விலை கிடைப்பதாலும், திருப்தியான விலை, குறையாத மகசூல் போன்ற அம்சங்கள் ஏல விவசாயி களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !