உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இதயம், நுரையீரல் புத்துயிர் பயிற்சி

இதயம், நுரையீரல் புத்துயிர் பயிற்சி

கம்பம்: இதயம், நுரையீரல் செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு முதலுதவி பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி காமயக்கவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. டாக்டர்கள் ஷிபாயா, முருகானந்தன், சித்தா டாக்டர் சிராசுதீன் ஆகியோர் பங்கேற்று பேசியதாவது: இதயம் அல்லது நுரையீரல் பாதிப்பால் ஒருவர் மயக்கம் அடைந்தால் முதலில் அவருக்கு நாடித் துடிப்பு, மூச்சு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பின் அவரது கழுத்தை லேசாக உயர்த்தி மூச்சு குழாய்கள் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.. மார்பகத்தில் ஒரு நிமிடத்திற்கு 30 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை 3 அல்லது 4 நிமிடங்கள் வரை செய்யலாம். பின்னர் 30 முறை அழுத்தும் போது இடை இடையே வாயோடு வாய் வைத்து ஊத வேண்டும். இதனால் மயக்கமுற்றவருக்கு ஆக்சிஜன் கிடைக்கும். இந்த முதலுதவிகளை மயக்கமுற்ற 8 நிமிடங்களுக்குள் செய்ய வேண்டும். 8 நிமிடங்களுக்கு மேலாகினால் ஆக்சிஜன் மூளைக்கு செல்வது தடைபடும் என்றனர். இந்த முதலுதவி விழிப்புணர்வை மக்கள் கூடும் இடங்களில் செய்து காண்பிக்க டாக்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கு இதயம் நுரையீரல் புத்துயிர்ப்பு திட்டம் என்று பெயரிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ