தீக்குளிக்க முயன்ற 5 பேர் மீது வழக்கு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த 4 சகோதரிகள், அவர்களை இச்செயல் செய்ய துாண்டிய ராமமூர்த்தி ஆகிய 5 பேர் மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் அக்.,28 ல் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.கூட்டரங்கு நுழைவாயில் அருகே பெரியகுளம் தாலுகா எ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகள் பூபதி, கண்ணாமணி, நாகலட்சுமி, ராஜேஸ்வரி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்கள் மனுவில், அவர்களது அண்ணன் உடன் ஏற்பட்ட இடப்பிரச்சனைக்கு தீர்வு காண கோரி இருந்தது.இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்த நால்வர், அவர்களை இந்த செயல் செய்ய துாண்டிய பெரியகுளம் டி.கள்ளிபட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி வி.ஏ.ஓ., ஜீவா புகாரில் தேனி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.