உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே 18 வயது முதிர்வு பெறாத சிறுமிக்கு திருமணம் முடிந்து தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி விசாரணை நடத்தினார். திருமணத்திற்கு பின் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானதால் அவரை திருமணம் முடித்த வருஷநாடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் அவரது தந்தை கண்ணன், தாய் வரதலட்சுமி, சிறுமியின் தாய் ராஜேஸ்வரி, தந்தை தங்கப்பாண்டி ஆகியோர் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போச்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ