உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தகராறு 5 பேர் மீது வழக்கு

தகராறு 5 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி 46, இதே ஊரைச் சேர்ந்தவர் இவரது உறவினர் முருகன் 40, இருவர் நிலங்களும் அடுத்தடுத்து உள்ளது. நிலங்களுக்கு பாதை அமைப்பது, தண்ணீர் கொண்டு செல்வது குறித்து இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டு தகராறு ஆனது. இதில் விஜயலட்சுமி அவரது கணவர் அய்யப்பன், முருகன் அவரது உறவினர்கள் பெருமாள், மீனாட்சி, ஆகியோர் காயம் அடைந்தனர். விஜயலட்சுமி புகாரில் பெருமாள், முருகன், மீனாட்சி ஆகியோர் மீதும், முருகன் புகாரில் விஜயலட்சுமி, அய்யப்பன் ஆகியோர் மீதும் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ