உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.9.57 லட்சம் கையாடல் செய்த வங்கி மேலாளர் மீது வழக்கு

ரூ.9.57 லட்சம் கையாடல் செய்த வங்கி மேலாளர் மீது வழக்கு

பெரியகுளம்:தேனி மாவட்டம், பெரியகுளம் கனரா வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் ரூ.9.57 லட்சம் கையாடல் செய்த மேலாளர் கொல்லபத்துல்லா சுனில் ராஜூ 45, மீது வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பெரியகுளம் கனரா வங்கி ஓராண்டிற்கு மேல் மேலாளராக இருந்தவர் கொல்லபத்துல்லா சுனில் ராஜூ. தற்போது பணி மாறுதலில் சென்றார். இவர் வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கி கடன் தவணைத் தொகைகளை பெற்றுக்கொண்டு, அவர்களது கணக்கில் வரவு வைக்காதது தெரிந்தது. இது குறித்து வங்கி முதன்மை மேலாளர் கவிதா 45, கணக்குகளை ஆய்வு செய்தார். இதில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்த ரூ.9.57 லட்சத்தை, மேலாளர் கையாடல் செய்ததை கண்டறிந்தார். முதன்மை மேலாளர் புகாரில் வடகரை இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ