உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கந்துவட்டி புகாரில் கணவன் மனைவி மீது வழக்கு

கந்துவட்டி புகாரில் கணவன் மனைவி மீது வழக்கு

போடி: போடி அருகே சில்லமரத்துப்பட்டி அப்துல் கலாம் நகரில் வசிப்பவர் பிரியா. இவர் அதே பகுதியை சேர்ந்த வள்ளி என்பவரிடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு வட்டிக்கு ரூ.80,000 கடன் வாங்கி உள்ளார். வட்டி, முதலும் சேர்த்து மாதம் தோறும் ரூ.18,000 வீதம் ரூ.7 லட்சத்தி 38 ஆயிரம் கொடுத்து கணக்கை முடித்து உள்ளார். மேலும் ரூ. 3 லட்சம் தர வேண்டும் எனக் கூறி வள்ளி, இவரது கணவர் பாஸ்கரன் இருவரும் சேர்ந்து பிரியாவை தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். பிரியா புகாரில் போடி தாலுகா போலீசார் வள்ளி, பாஸ்கரன் மீது கந்து வட்டி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை