மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்...
11-Aug-2025
போடி : போடி அருகே நாகலாபுரம் காலனி மெயின் ரோட்டில் வசிப்பவர் கவிதா 32. இவர் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் உட்கார்ந்து இருந்தார். அப்போது கெஞ்சம்பட்டியை சேர்ந்த கார்த்திக் 38, கவிதாவிடம் தவறாக பேசினார். கவிதா கண்டித்து உள்ளார். இதனால் கார்த்திக், கவிதாவை கையால் அடித்து காயப்படுத்தினார். அருகே இருந்தவர்கள் விலக்கி விட்ட போது அரிவாளை எடுத்து வந்து கொலை செய்து விடுவதாக கவிதாவை மிரட்டி உள்ளார். கவிதா புகாரில் போடி தாலுகா போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
11-Aug-2025