உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.4.50 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

ரூ.4.50 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி; தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா, தியாகராஜர் காலனியைச் சேர்ந்தவர் யோகானந்தம் 60. தேவதானப்பட்டியைச் சேர்ந்த நல்லமலை 50. குறைந்த வட்டியில் பணம் வாங்கி தருவதாக விளம்பரம் செய்திருந்தார். இதனை நம்பி யோகானந்தம், நல்லமலையிடம் ரூ.30 லட்சம் கடன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதற்கு யோகானந்தம் பல தவணைகளாக நல்லமலைக்கு கமிஷனாக ரூ.4.50 லட்சம் கொடுத்துள்ளார். பணம் வாங்கி தராமல் ஏமாற்றி நல்லமலை மோசடி செய்தது தெரிந்தது. தேவதானப்பட்டி போலீசார் நல்லமலை, அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ