உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அடுத்தவர் ஏ.டி.எம்., கார்டில் பணம் எடுத்து ஏமாற்றியவர் மீது வழக்கு

அடுத்தவர் ஏ.டி.எம்., கார்டில் பணம் எடுத்து ஏமாற்றியவர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: அடுத்தவர் ஏ.டி.எம்., கார்டில் பணம் எடுத்து ஏமாற்றிய நபரை ஆண்டிபட்டி போலீசார் தேடி வருகின்றனர்.ஆண்டிப்பட்டி அருகே டி.புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சேகர் 44, தற்போது புது வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுவதற்கு வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தார். ஏப்ரல் 16ல் இவரது வங்கி கணக்கில் லோன் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்று பார்ப்பதற்காக ஏ.டி.எம்., மையத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரிந்த பெயர், முகவரி தெரியாத நபரிடம் ஏ.டி.எம்., கார்டை கொடுத்து பார்த்தபோது லோன் பணம் கணக்கில் வரவாகி இருந்துள்ளது. அந்த ஏ.டி.எம்., கார்டு மூலம் ரூ.10 ஆயிரம் எடுத்து கொடுக்க சொன்னதை தொடர்ந்து, அந்த நபர் ரூ.10 ஆயிரம் எடுத்து கொடுத்துள்ளார். பின்னர் சேகரின் ஏ.டி.எம்., கார்டுக்கு பதிலாக வேறொரு ஏ.டி.எம்., கார்டை கொடுத்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து மாயமானார். மாயமான நபர், சேகர் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி தேனி அல்லி நகரத்தில் ரூ.30 ஆயிரம், போடியில் உள்ள நகை கடையில் சேகர் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ.75 ஆயிரத்திற்கு நகை வாங்கியுள்ளார். மொத்தம் சேகர் கார்டில் ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரம் பணத்தை ஏமாற்றி எடுத்துள்ளார். சேகர் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ