உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தோட்டா வைத்திருந்தவர் கைது ராணுவ வீரர் மீது வழக்கு

தோட்டா வைத்திருந்தவர் கைது ராணுவ வீரர் மீது வழக்கு

போடி:தேனி மாவட்டம், போடி பங்கஜம் பிரஸ் பின்புறம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி 36. இவர் கரட்டுப்பட்டி செல்லும் ரோட்டில் நடந்து சென்றார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். போலீசார் பிடித்து விசாரித்ததில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக தோட்டா ஒன்று மறைத்து வைத்து இருந்தது தெரிந்தது. போலீசார் தங்கப் பாண்டியிடம் இருந்த தோட்டாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் போடி ஆர்.ஐ., ஆபீஸ் ரோட்டில் வசிக்கும் உத்திரபிரதேசத்தில் ராணுவவீரராக வேலை பார்க்கும் ராஜதுரை என்பவரிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டா வாங்கியதாக கூறினார். இதன்பேரில் போடி தாலுாகா போலீசார் தங்கப் பாண்டியை கைது செய்து, ராணுவவீரர் ராஜதுரை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி