உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நீதிமன்ற பணியாளர்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு

நீதிமன்ற பணியாளர்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு

தேவதானப்பட்டி: மாவட்ட நீதிமன்றம் உத்தரவில் ஆக்கிரமிப்பு வீட்டினை இடிக்க வந்தவர்களை மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெரியகுளம் தாலுகா, எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அன்புராஜ். இவரது பக்கத்து வீட்டுக்காரர் சின்னமணி. தங்களது வீட்டின் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக சின்னமணி மீது நீதிமன்றத்தில் அன்புராஜ் வழக்கு தொடர்ந்தார். பெரியகுளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவில், நீதிமன்றம் முதுநிலை பணியாளர் ஆனந்தக்குமார், சர்வேயர்கள், போலீசார்கள் ஆக்கிரமிப்பு வீட்டை இடிக்க மண் அள்ளும் வாகனத்தில் வந்திருந்தனர். வீட்டின் சுவரை இடிக்க தயாரான மண் அள்ளும் வாகன டிரைவரை சின்னமணி அவதூறாக பேசியுள்ளார். வீட்டை இடித்தால் தூக்கிட்டு தற்கொலை செய்வேன் என சின்னமணி மனைவி அம்சலட்சுமி மிரட்டியுள்ளார். இவர்களின் உறவினர் ரஞ்சித்குமார் அவதூறாக பேசியுள்ளார். ஆனந்தக்குமார் புகாரில், ஜெயமங்கலம் போலீசார் சின்னமணி உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ