மேலும் செய்திகள்
சிறுமி மாயம்: தாய் புகார்
31-Jul-2025
கடமலைக்குண்டு : வருஷநாடு பகுதியைச் சேர்ந்தவர் நாணயம், இவர் தனது வீட்டை தனியார் வங்கியில் அடமானம் வைத்து வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் வீடு ஏலம் விடப்பட்டது. வருஷநாடு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் வீட்டை ஏலத்தில் எடுத்து அதற்கான தொகை ரூ.20 லட்சத்து 75 ஆயிரம் வங்கியில் செலுத்தி அதற்கான சான்றிதழ்களும் பெற்றார். இந்நிலையில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து நாணயம் அவரது மனைவி ஆகியோர் அந்த வீட்டில் இருந்து கொண்டு வெளியில் வர மறுத்துள்ளனர். இதுகுறித்து கேட்ட சிவகுமாரையும் மிரட்டி உள்ளனர். புகாரில் வருஷநாடு போலீசார் அத்துமீறி நுழைந்த இருவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
31-Jul-2025