உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொலைமிரட்டல் மூவர் மீது வழக்கு

கொலைமிரட்டல் மூவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி வெங்கடாசலம் தெருவைச் சேர்ந்த மன்மதன் மனைவி தேவிகா 36. இரு மகள்கள் உள்ளனர். கடந்த பிப். 17ல் மன்மதன் கொலை செய்யப்பட்டார். தேவிகாவிற்கும், அவரது மாமியார் செல்லம்மாளுக்கும் இடையே சொத்து பிரச்னை ஏற்பட்டது. தேவிகா மஞ்சளாறு அணை அருகே பாலூத்து பகுதியில் தனது மாமனார் பெயரில் உள்ள 3 ஏக்கர் தென்னந்தோப்பிற்கு சென்றுள்ளார். அங்கு வந்த மன்மதன் தாய்மாமன் அர்சுணன், மன்மதன் அக்கா மலர்விழி, அம்மா செல்லம்மாள் ஆகியோர் தேவிகாவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். தேவிகா புகாரில் தேவதானப்பட்டி போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ