மேலும் செய்திகள்
சொத்து தகராறு: மூவர் மீது வழக்கு
16-Nov-2024
பெரியகுளம்; பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேல் 75. இவரது இடத்திற்கு மேற்கு பக்கம் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் இளையராஜா ஆக்கிரமிப்பு செய்திருந்தார். நெடுஞ்சாலைத் துறை சர்வேயர் மூலம் அளந்து ஆக்கிரமிப்பு இடத்தை காலிசெய்தனர். இதற்கு சுந்தரவடிவேல் தான் காரணம் என நினைத்து இளையராஜா, இவரது மனைவி பிரியா, உறவினர் பாலமுருகன் ஆகியோர், சுந்தரவடிவேல் இடத்தின் காம்பவுண்ட் சுவரினை இடித்தும், கட்ட முயற்சிக்கும் போது வேலையாட்களை அவதூறாக பேசி, ஆயுதத்தை காட்டி மிரட்டியுள்ளனர். போலீசார் இளையராஜா உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
16-Nov-2024