மேலும் செய்திகள்
அலைபேசி திருடிய இருவர் மீது வழக்கு
29-Dec-2024
தகராறு இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்கு
05-Jan-2025
பெரியகுளம் : பெரியகுளம் கீழ வடகரை கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் குணால் 25. இவரது நண்பர் சிவா 25. அதே பகுதி மந்தையம்மன் கோயில் தெரு நண்பர் அருண்குமார் 24. குணால், சிவா வனவிலங்குகளை வேட்டையாடுவது வழக்கம்.சில தினங்களுக்கு முன் இருவரும் காட்டுப்பன்றியை வேட்டையாடியதால் வனக்காவலர்கள் அபராதம் விதித்தனர். இருவரும் அபராதம் செலுத்திவிட்டு வீட்டிற்கு வந்தனர். வனத்துறைக்கு தகவல் கொடுத்தது அருண்குமார் என நினைத்தனர். தெய்வேந்திரபுரத்திற்கு அருண்குமாரை இருவரும் வரவழைத்தனர். அருண்குமாரை, குணால் பிடித்துக் கொள் சிவா அரிவாளால் வெட்டினார். காயம்பட்ட அருண்குமார் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.
29-Dec-2024
05-Jan-2025