உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேக்கடியில் கண்காணிப்பு கேமரா மாயம் ஒரு மாதத்திற்குப்பின் வழக்குப்பதிவு

தேக்கடியில் கண்காணிப்பு கேமரா மாயம் ஒரு மாதத்திற்குப்பின் வழக்குப்பதிவு

கூடலுார்:தேக்கடி தமிழக நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா மாயமானது தொடர்பாக ஒரு மாதத்திற்குப் பின் கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தேக்கடியில் தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் ஆய்வாளர் மாளிகை, அலுவலகம், குடியிருப்பு, தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர் ஆகியவை உள்ளது. பாதுகாப்பு கருதி வளாகத்தில் 2024 டிச.20ல் தமிழக அதிகாரிகள் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி உடனடியாக அகற்ற கேரள வனத்துறையினர் எச்சரித்தனர். இந்நிலையில் டிச.21ல் ஷட்டர் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, ரிசீவர், ஒயர், கம்பம் அனைத்தும் மாயமானது. இதுகுறித்து தமிழக அதிகாரிகள் குமுளி போலீசில் புகார் செய்தனர். இதில் விசாரணை நடத்துவதாக காலம் தாழ்த்திய கேரள போலீசார், ஒரு மாதத்திற்குப் பின் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை