உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிரமம் இல்லாத போக்குவரத்திற்கு ஆண்டிபட்டியில் சென்டர் மீடியன் தேவை

சிரமம் இல்லாத போக்குவரத்திற்கு ஆண்டிபட்டியில் சென்டர் மீடியன் தேவை

ஆண்டிபட்டி: கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதியில் போக்குவரத்து குளறுபடிகளை தடுக்க தேவையான இடங்களில் சென்டர் மீடியன் அமைக்க போலீசார், தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் வரை உள்ள ஒன்றரை கி.மீ., துாரம் ஆண்டிபட்டி நகர் பகுதியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆண்டிபட்டி நகர் பகுதியில் போக்குவரத்து வசதிக்காக ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்த இடங்களை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாமல் ஆக்கிரமித்து தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரோட்டின் ஓரங்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் ரோடு வரை விரிவாக்கம் செய்து ஆக்கிரமித்து உள்ளனர். தற்போது ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் இருந்து ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை வரையும், ஆண்டிபட்டி காளியம்மன் கோயில் வளைவில் இருந்து ஆண்டிபட்டி செக்போஸ்ட் வரையும் அகலமான ரோட்டில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். இதனை போலீசாரும் கண்டு கொள்வது இல்லை. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வைக்கப்பட்ட மைய தடுப்புகளை போலீசார் அகற்றி விட்டனர். ஆண்டிபட்டியில் தேவையான இடங்களில் மைய தடுப்புகளோ அல்லது நிரந்தரமாக சென்டர் மீடியனோ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி