உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  குழந்தைகள் பாதுகாப்புக்குழு விழிப்புணர்வு கருத்தரங்கம்

 குழந்தைகள் பாதுகாப்புக்குழு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தேனி: குழந்தைகள் நலத்துறை சார்பில் பெருந்திட்ட வளாக கூட்டரங்கில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மதியழகன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட குழந்தைகளை முறையாக அரசிடம் ஒப்படைத்தல், தொட்டில் குழந்தை திட்டம், முறையாக குழந்தைகள் தத்தெடுக்கும் வழிமுறைகள், விதிமீறுபவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vgmy34d4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குழந்தைகள் நலக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன்,. முன்னாள் தலைவர் வனஜா, அரசு மருத்துவக் கல்லுாரி மகப்பேறு மருத்துவர் சாந்தாவிபூலா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் செல்வி, தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம், மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு தனியார் மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள், நிர்வாகிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்