உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை போக்சோ அதிவிரைவு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை போக்சோ அதிவிரைவு நீதிமன்றம் தீர்ப்பு

மூணாறு: மூணாறு அருகே பைசன்வாலி பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி பைசன்வாலி காக்கா கடை பகுதியைச் சேர்ந்தவர் அஜய்கோஸூக்கு 27, இருபத்தைந்து ஆண்டுகள் சிறை, ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்து, இடுக்கி மாவட்ட வைனாவ் அதிவிரைவு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2021ல் தண்டனை பெற்ற அஜய்கோஸ், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ராஜாக்காடு போலீசார் அஜய்கோஸை கைது செய்தனர். இந்த வழக்கு இடுக்கி பைனாவ் அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து குற்றவாளி அஜய்கோஸூக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்து, நீதிபதி லைஜூ மோள்ஷெரீப் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை