மேலும் செய்திகள்
சீரமைப்பு... மீண்டும் குப்பை.. . 'ரிப்பீட்டு'
26-Sep-2024
தேனி: தேனி மாவட்ட நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பையை கொட்டி சுகாதர சீர் கேடு ஏற்படுத்துவது தொடர்கிறது.மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் வைகை ஆற்று பாலம் அருகே காய்கறி கழிவுகள், கான்கிரீட் கழிவுகள், மருத்துவ கழிவுகள், ஆடை தயாரிப்பு நிறுவன கழிவு ஆகியவற்றை சமூக விரோதிகள் ரோட்டில் கொட்டி செல்வது தொடர்கிறது. தேனி -பெரியகுளம் ரோடு பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் மெயின் ரோட்டில் இரவில் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதை உண்பதற்காக சேரும் தெருநாய்கள் அடிக்கடி சண்டையிட்டு திடீரென ரோட்டில் குறுக்கிடுறது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும் இதனால் ரோட்டோரங்களில் துர்நாற்றம் வீசு துவங்கி உள்ளது.இதே நிலை திண்டுக்கல்-குமுளி பைபாஸ் ரோட்டில் வீரப்ப அய்யனார் கோயில் செல்லும் ரோடு அருகில், அன்னஞ்சி-புதுபஸ் ஸ்டாண்ட் பை பாஸ்ரோடு என பல இடங்களில் தொடர்கிறது. இப் பகுதியில் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் முகம் சுளிக்கின்றர். இதனை சம்மந்தப்பட்ட உள்ளாட்சிகள், நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்வது இல்லை. நெடுஞ்சாலைகளில் குப்பை கொட்டி சுகாதார கேட்டை ஏற்படுத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
26-Sep-2024