உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலரில் குடை பிடித்த பேரூராட்சி ஊழியர் பலி

டூவீலரில் குடை பிடித்த பேரூராட்சி ஊழியர் பலி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வாசுகி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மனைவி ராமாயி 45. தாமரைக்குளம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர். இவரை இவரது கணவர் கருத்தப்பாண்டி,டூவீலரில் வீட்டிலிருந்து பேரூராட்சி அலுவலகம் அழைத்து வரும் போது, சாரல் மழை பெய்தது. ராமாயி டூவீலர் பின்புறம் உட்கார்ந்து குடை பிடித்துள்ளார். காற்றில் குடை இழுத்தது. இதனால் ராமாயி டூவீலரிலிருந்து தவறி விழுந்தார். பலத்த காயத்துடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ